இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிசிசிஐ!

பிசிசிஐ மற்றும் இந்திய அணி தேர்வுக்குழு இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத மற்ற வீரர்களை பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி டிராபி போட்டிகளில் அவர்களின் மாநில அணிகளுக்காக விளையாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள பல வீரர்கள் டெஸ்ட் அணியில் சரியாக விளையாட காரணத்தினால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக தங்களை தயார்படுத்துவதற்காக ரஞ்சி டிராபி போட்டிகளை தவிர்ப்பதாக பிசிசிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்திய அணி விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் சிறிது ஓய்வு வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலிருந்து விலகினார்.

மேலும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான டி20 அணியில் அவர் இடம் பெறவில்லை. அதே போல இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிக்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கும் இஷான் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், இஷான் கிஷன் அணியில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட், இந்திய அணிக்கு திரும்ப வருவதற்கு முன்பு இஷான் கிஷன் சில உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கூறினார். ரஞ்சி டிராபியில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவுடன் பேட்டிங் பயிற்சி செய்ய பரோடா புறப்பட்டு சென்றார். இதனால் கடும் போகம் அடைந்த பிசிசிஐ, இஷான் கிஷன் மட்டும் இல்லாது, தற்போது தேசிய அணியில் இடம் பெறாத அனைத்து வீரர்களும் ரஞ்சியில் அந்தந்த மாநில அணிகளுடன் சேர வேண்டும் என்று கூறி உள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெறாத க்ருனால் பாண்டியா, தீபக் சாஹர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் கூட தற்போது ரஞ்சியில் விளையாட வேண்டும். இந்திய வீரர்கள் ஐபிஎல் அல்லது சர்வதேச கிரிக்கெட்டுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க கூடாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. “வீரர்கள் வெறுமனே சர்வதேச கிரிக்கெட் அல்லது IPLக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது. அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் மற்றும் அந்தந்த மாநில அணிகளுக்கான தங்கள் கடமைகளை மதிக்க வேண்டும்,” என்று பிசிசிஐ கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது என்சிஏவில் பயிற்சி பெற்று வரும் ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் வெளியேறிய விராட் கோலி போன்ற வீரர்கள் இதன் கீழ் வர மாட்டார்கள். 

 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: 

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கேஎல் ராகுல்*, ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.