Indian Family Found Dead With Gunshot Wounds At Their $2 Million US Home | அமெரிக்காவில் குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த இந்திய தம்பதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: கேரளாவைச் சேர்ந்த இந்திய தம்பதி, இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் மர்மமான முறையில் குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பாத்திமா மாதா தேசிய கல்லூரியின் முதல்வராக இருந்தவர் ஹென்றி. இவரது மகன் சுஜித் (42). இவரது மனைவி ஆலிஸ் பிரியங்கா (40). குழந்தைகள் நோவா மற்றும் நெய்தன். இரட்டைக் குழந்தைகள். வயது 4. சுஜித், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வேலை கிடைத்ததால், அமெரிக்கா சென்றார்.

பிரியங்காவும் ‛சீனியர் அனாலிஸ்ட்’ ஆக பணிபுரிந்து வந்தார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 2 மில்லியன் டாலர் மதிப்புடைய பங்களாவில் குழந்தைகளுடன் இத்தம்பதியர் வசித்து வந்தனர். இந்த வீட்டை 2020ல் தான் சுஜித் வாங்கி உள்ளார்.

பிரியங்காவின் தாயார், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அமெரிக்காவில் தான் இருந்துள்ளார். அங்கிருந்து, திருவனந்தபுரம் வந்த உடன் மகளை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். பல முறை முயற்சித்தும், மகள், மருமகன் யாரும் பதில் அளிக்காத காரணத்தினால், அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சுஜித் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீடு உட்புறமாக பூட்டிக்கிடந்தது.

கதவை தட்டியும் திறக்காத காரணத்தினால், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (பிப்.,12) இரவு போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சுஜித், பிரியங்கா மற்றும் அவரது குழந்தைகள் உயிரிழந்து கிடந்தனர். குழந்தைகள் படுக்கை அறையில் இறந்து கிடந்த நிலையில், சுஜித் மற்றும் பிரியங்கா உடலில் குண்டு காயங்களுடன் குளியல் அறையில் இறந்து கிடந்தனர். அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.