தமிழ் திரைத்துறையினருக்கு ஜாக்பாட் : பூந்தமல்லியில் ரூ.500 கோடி செலவில் பிரமாண்ட திரைப்பட நகரம்

ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவின் தலைநகராக சென்னை இருந்தது. தமிழ் படங்கள் மட்டுமின்றி பிறமொழி படங்களும் இங்கு தான் அதிகளவில் நடந்து வந்தன. அதற்கு ஏற்றார்போல் நிறைய சினிமா ஸ்டுடியோக்களும் இங்கு இருந்தன. பின்னர் காலப்போக்கில் அந்த மாநிலங்களுக்கு சினிமாக்கள் இடம் பெயர்ந்தன. மேலும் சென்னையில் இருந்த சினிமா ஸ்டுடியோக்கள் பலவும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மால்களாக மாறின. தற்போது ஓரிரு சினிமா ஸ்டுடியோக்கள் மட்டுமே இங்கு உள்ளன. தமிழ் சினிமாவின் முக்கிய படப்பிடிப்புகள் தற்போது வெளிமாநிலங்களில் தான் நடக்கின்றன.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு இதை தாக்கல் செய்தார். அதில் சினிமா துறையினருக்கு ஜாக்பாட்டாக தமிழ்த் திரைத் துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன திரைப்பட நகரத்தில் விஎப்எக்ஸ், அனிமேஷன், புரொடக்ஷன் பணிகள் பிரிவு உள்ளிட்ட சகல வசதிகளும் இடம் பெற போகின்றன.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.