
மும்பையில் திறக்கப்பட்ட ஸ்டுடியோ கிரீன் புதிய நிறுவனம்!
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது தங்கலான், கங்குவா உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை சென்னையில் செயல்பட்டு வந்த அவரது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் புதிய கிளை தற்போது மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
மேலும் இதுவரை தமிழில் படங்களை தயாரித்து வந்த ஞானவேல் ராஜா, இனிமேல் ஹிந்தியில் பிரமாண்ட படங்களை தயாரிக்கப் போகிறாராம். அதன் காரணமாகவே மும்பையிலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாம். இது குறித்த தகவல், புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.