சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இன்று மாலை பொறுப்பேற்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலித் சமூகத்தைச்சேர்ந்த ஒருவர் சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் கே.எஸ்.அழகிரியின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், அவரை மாற்றி விட்டு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கடந்த இரு ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தன. அதன்படி தலைவர் பதவிக்கு […]