வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக புறப்பட்ட நிலையில், ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு, டில்லியை ஒட்டிய கனூர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் நிலவுகிறது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகள் இன்று (பிப்.,21) டில்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது பஞ்சாப்- ஹரியானா எல்லைப்பகுதியான ஷம்பு என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் மீது ஹரியானா மாநில போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டில்லி , பஞ்சாப், ஹரியானா எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் 14 ஆயிரம் பேர், 1200 டிராக்டர், 300 கார்களில் அணிவகுத்து வந்தனர். டில்லியை ஒட்டிய கனூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. விவசாயிகளை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போலீசார் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஒரு விவசாயி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பஞ்சாபி நடிகை ஆதரவு
விவசாயிகளுக்கு ஆதரவாக டில்லி நோக்கிய பேரணியில் பிரபல பஞ்சாபி நடிகை சோனியா-மான் இணைந்துள்ளார். அவரும் பேரணியில் பங்கேற்றுள்ளார். அவர்களை தடுக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement