சண்டிகர் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்குப் பஞ்சாப் அரசு ரூ, 1 கோடி நிவாரணம் அளிக்கிறது. கடந்த 13 ஆம் தேதி விவசாயிகள் டில்லியை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தைத் தொடங்கினர்.அவர்கள் பஞ்சாப்-அரியானா இடையிலான ஷாம்பு எல்லையிலும், கானாரி எல்லையிலும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய 4-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, மத்திய அமைச்சர்கள் முன்வைத்த யோசனையைத் தொடர்ந்து, கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் […]
