சென்னை ராமாபுரத்தில் அரசமரம் சந்திப்பு என்பது முக்கியமான பிரதான சாலையாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்தச் சாலையைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த அரசமர சந்திப்பில் பேருந்து நிறுத்தமும் அமைந்திருக்கிறது. அப்பகுதியினருக்கு முக்கியமான பேருந்து நிறுத்தமாக அது உள்ளது. இந்நிலையில் அங்கு அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்படுகிறது.
பிப்ரவரி 24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் சென்னை ராமபுரத்தில் இருக்கும் அரசமரம் சந்திப்பு பேருந்து நிறுத்ததுக்கு முன்பு பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. ராமாபுரம் உள்பகுதியிலிருந்து வெளி இடங்களுக்குச் செல்வதற்கு முக்கிய பேருந்து நிறுத்தமாக அந்த அது இருக்கிறது.எனினும் பேருந்து நிறுத்தம் மக்களுடைய பயன்பாட்டிற்கும் மட்டும் உபயோகிப்படுவது கிடையாது, பெரிய அளவிலான பேனர்களும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அங்கே அடிக்கடி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த பேருந்து நிறுத்ததில் பேனர்கள் வைப்பது என்பது தொடர்கதையாகவே நீடிக்கிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இதே போல திமுக-வினர் பெரிய பேனர் ஒன்றை வைத்தனர். இது குறித்து நமது விகடனில் செய்தி பதிவிட்டு இருந்தோம். நம்முடைய செய்தியின் எதிரொலியாக அதிகாரிகள் அதை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள்.
ஆனால், `கட்சிகள் மாறலாம், பேனர்கள் மாறாது’ என்பது போல பிப்ரவரி 24 அன்று அதே இடத்தில் அதிமுக சார்பிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நிழற்குடையில் இருக்கைகள் இருந்தும் மக்களால் அதனை பயன்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகப் பயணிகளுக்கு மிகவும் சிரமாக இருக்கிறது.
இது குறித்து அந்த பேருந்தைப் பயன்படுத்தக் கூடிய பயணிகள் சிலரிடம் பேசியபோது “இங்கே இருந்து நாங்கள் பாரிமுனை போகவேண்டும். அங்கே செல்லக் கூடிய பேருந்து என்பது ஒன்றே ஒன்று தான். அது எப்போது வரும் என்று தெரியாது. இந்த வெயிலில் நான் எவ்வளவு நேரம் நிற்பது?. நிழற்குடையிலிருந்தால் சாலையில் என்ன போகிறது என்றே எனக்குத் தெரியவில்லை. பிறகு பேருந்து வருகிறதா வரவில்லையா என்பது எனக்கு எப்படித் தெரியும். இது பேருந்து நிற்பதற்கும் எங்களுடைய பயன்பாட்டிற்கும் தானே. இது ஒன்றும் போஸ்ட் கம்பம் கிடையாதே பேனர் வைப்பதற்கு” என்று கொதிக்கிறார்கள்.

இது போன்று பேனர் வைப்பது என்பது அந்தப்பேருந்து நிறுத்ததில் தொடர்ச்சியாக நடக்கிறது. தேர்தல் காலம் வேறு நெருங்கிறது, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். அதிகாரிகள் கவனிப்பார்களா?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY