சென்னை இன்று தாம்பரம் – கடற்கரை இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 2 வாரங்களாகச் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகளின் வசதிக்காகத் தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்துக் கழகம் வெளியிடப்பட்டுள்ள […]