
ஜோவிகாவின் க்யூட் கிளிக்ஸ் வைரல்
வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை ஹீரோயினாக நடிக்க வைப்பதில் அதிக முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கெல்லாம் அனுப்பி வைத்தார். ஜோவிகாவும் தன்னால் முடிந்த வரை பிக்பாஸ் வீட்டில் விளையாடி வெளியேறினார். இந்த முயற்சியானது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஜோவிகாவுக்கு ஓரளவு பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறாலம். தற்போது மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ஜோவிகா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ஜோவிகா ஹீரோயினாக மாறிவிட்டதாக ரசிகர்கள் லைக்ஸ்களை தெரிவித்துள்ளனர்.