வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத் : தெலுங்கானாவில், போக்குவரத்து சிக்னலில் நின்றபடி, வேண்டாம் என அறிவுறுத்தியும், காரை சுத்தம் செய்த நபரை, அரசு அதிகாரி எட்டி உதைத்ததில், பின்னால் வந்த லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார்.
தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அர்மூர் என்ற சந்திப்பு சிக்னலில் அரசு அதிகாரி ஒருவர் காரில் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், அந்த அதிகாரியின் காரை சுத்தம் செய்தார். அவர் வேண்டாம் எனக் கூறியும் அந்த நபர் சுத்தம் செய்தார்.
இதனால் அரசு அதிகாரிக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதிகாரி காரில் இருந்து இறங்கி, அந்த நபரை எட்டி உதைத்தார்.
இதில் நிலைதடுமாறிய அந்த நபர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
 
Advertisement
 
		