சென்னை நேற்று தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மருத்துவக் காப்பீட்டு செயலி ஒன்றை துவக்கி வைத்துள்ளார். நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (27.02.2024) கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பிலான பின்வரும் நிகழ்ச்சிகளைப் பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை 6வது தளத்தில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), அரசு பொது நிதி நடைமுறையை எளிமைப்படுத்துதல், கருவூலத்தில் இருந்து கடைசி பயனர் வரை நிதி […]
