ஜப்பான் கனவு நிறைவேறியதில் ராஷ்மிகா மகிழ்ச்சி

நடிகை ராஷ்மிகா மந்தனா ஜப்பான் நாட்டில் நேற்று நடந்த கிரன்ச்சிரோல் அனிமே அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ளார். அங்குள்ள ரசிகைகள் சிலர் ராஷ்மிகாவை சந்தித்து வரவேற்றதில் ராஷ்மிகாவும் மகிழ்ச்சியடைந்து பதிவிட்டிருந்தார்.

அடுத்து ஜப்பான் நாட்டிற்குச் சென்றது குறித்து மகிழ்ச்சியான பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. “சிறு வயதிலிருந்தே, நான் பல வருடங்களாகப் போக வேண்டும் என்று கனவு கண்ட இடம் ஜப்பான். அது நடக்கும் என்று நினைக்கவே இல்லை. அனிமே உலகத்தில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய ஒருவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. கடைசியில் அது நனவானது.

இங்கு அனைவரையும் சந்திக்க முடிந்தது, நம்ப முடியாத அன்பைப் பெறுவது, இவ்வளவு அன்பான வரவேற்பைப் பெறுவது, உணவு, வானிலை, சுத்தமான இடங்கள், அழகான மனிதர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி ஜப்பான்… உண்மையில்… நான் உன்னை காதலிக்கிறேன், உண்மையிலேயே….நீ மிக சிறப்பானவர். இனி, ஒவ்வொரு வருடமும் இங்கு வருவேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.