மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி இன்று திடீரென தொடங்கப்பட்டுள்ளது பரபரப்பைஏற்படுத்தி வரும் நிலையில், தேர்தல் வருவதால் எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதுபோல மதுரை எம்.பி. வெங்கடேசனும் விமர்சனம் சய்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. மருத்துவமனைக்கு தோப்பூரில் ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்தையும், அருகில் உள்ள […]
