சென்னை: தமிழ்நாட்டில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 60வயதான ஆண்கள் மற்றும் 58 வயதான பெண்களுக்கு முதியோர் உதவி தொகையாக மாதம் 1200 ரூபாய் வழங்கப்படுகிறது.. இந்த தொகை விதவையர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. முதியோர் உதவி தொகையை பெற ஆதார் அட்டை அவசியம் ஆகும். முதியோர் உதவி தொகையை வீடுகளுக்கே […]
