சென்னை: ஜீ5 தளத்தில் வெளியாகி ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அயலி வெப் தொடர் தற்போது திரைப்படமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பெண் கல்வி, மூடநம்பிக்கை, குழந்தைத் திருமணத்திற்காக நடக்கும் கல்வி இடை நிற்றல்கள், மாதவிடாயைப் பற்றிய மூட நம்பிக்கைகள் என ஒவ்வொரு கருத்திற்கு தகுந்தாற் போல காட்சி அமைப்புக்களை செதுக்கி இருந்தார்
