சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட பெண் திமுக பிரமுகர் சிம்லா முத்துச் சோழன் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்பு கருணாநிதி முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் சற்குணபாண்டியன். இவர் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் பலமுறை நின்று இவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக, தி.மு.க. களமிறக்கிய வேட்பாளர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் […]
