TVK: உறுப்பினர் சேர்க்கைக்கான அணி அறிவிப்பு… நிர்வாகிகளை நியமித்த விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைப் பணியை மேற்கொள்ள, புதிதாக `உறுப்பினர் சேர்க்கை அணி’ உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கென நிர்வாகிகளையும் நியமித்திருக்கிறார் கட்சியின் தலைவரான விஜய். அணியின் மாநிலச் செயலாளரான விஜயலட்சுமி தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அணி, இரண்டு கோடி உறுப்பினர் சேர்க்கைப் பணியை மேற்கொள்ளும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக பள்ளிப் பாடத்திட்டத்தில் பெரியார் வாழ்க்கை வரலாறு!
கர்நாடக காங்கிரஸ் அரசு, 2024-25 கல்வியாண்டுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் தந்தை பெரியார், சாவித்ரிபாய் பூலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்க்கத் திட்டமிட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஜி ஹெக்டே தலைமையிலான கர்நாடக பாடப் புத்தகத் திருத்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பாடப் புத்தக திருத்தத்தில், சிந்து-சரஸ்வதி நாகரீக அத்தியாயத்தை ‘பண்டைய இந்திய நாகரிகம்-சிந்து-சரஸ்வதி நாகரிகம்’ என மறுபெயரிடப்பட்டிருக்கிறது.

அதோடு, வேத காலம், சனாதன தர்மம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 8-ம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகத்தில், சமண, பௌத்த மதங்களின் தோற்றம் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், கிரீஷ் கர்னாட், தேவனூர் மகாதேவா போன்ற முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளும் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் பிரிவில், தந்தை பெரியாரின் வழக்கை வரலாறு சேர்க்கப்பட்டிருக்கிறது. மஞ்சுநாத் ஜி ஹெக்டே தலைமையிலான குழு அளித்த இந்தத் திருத்தங்களுக்கு கர்நாடக கல்வித்துறை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், வரும் கல்வியாண்டில் கர்நாடக பாடப் புத்தகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2022-ல் கர்நாடக பள்ளி பாடப் புத்தகத்திலிருந்து நாராயண குரு, தந்தை பெரியார் போன்ற சமுக சீர்திருத்தவாதிகள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க அரசுமீது எழுந்த குற்றச்சாட்டுகள் விவாதப்பொருளாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொலை செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று சிறுமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் சிறுமி பயன்படுத்திய பொம்மைகள், புத்தங்கள் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்களின் கண்ணீர் அஞ்சலுக்கு இடையே சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொலை செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது சிறப்பு குழு. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY