Tripura BJP, a ministerial post for the alliance party in the government | திரிபுரா பா.ஜ., அரசில் கூட்டணி கட்சிக்கு அமைச்சர் பதவி

அகர்தலா, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் மாணிக் சாகா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, திரிபுரா பழங்குடியின தன்னாட்சி மாவட்ட கவுன்சிலில் உள்ள பகுதிகளை, தனி மாநிலமாக பிரிக்கக் கோரி, திப்ரா மோத்தா கட்சி போராடி வருகிறது.

சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிபுரா அரசு மற்றும் திப்ரா மோத்தா இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி பழங்குடியினருக்கு, கலாசாரம், மொழி, பொருளாதார வளர்ச்சி, நிலம், அரசியல் உரிமை உள்ளிட்டவை வழங்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 13 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள திப்ரா மோத்தா, ஆளும் பா.ஜ., அரசில் இணைந்தது. இதன்படி, அக்கட்சியின் அனிமேஷ் தேபர்மா, பிரிஷகேது தேபர்மா ஆகியோர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.

திப்ரா மோத்தா கட்சித் தலைவர் பிரத்யோத் தேபர்மா கூறியதாவது:

அரசில் இணைந்தாலும், தனி மாநில கோரிக்கை தொடர்பான எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.