சிஏஏ சட்டம் : விஜய்யை எதிர்த்து கருத்து சொன்ன 'மார்க் ஆண்டனி' தயாரிப்பாளர்

சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‛‛சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் சிசிஏ போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்'' என கூறியிருந்தார். அவரது அறிக்கைக்கு எதிர்ப்பும், ஆதரவும், விமர்சனங்களும், கிண்டல்களும் நேற்று சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தது.

விஜய் கட்சி ஆரம்பித்தபின் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், அவரது கட்சியில் சினிமா பிரபலங்கள் யாரும் இன்னும் சேரவில்லை. இதனிடையே, விஜய்யின் சிஏஏ அறிக்கைக்கு 'மார்க் ஆண்டனி' படத் தயாரிப்பாளரான வினோத் குமார் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

“இதற்குப் பிறகு அவர் மீதான அன்பு நடிகராக மட்டுமே… அரசியல் ரீதியாக ஆதரவில்லை. மேலும், அவரது அரசியல் குறித்து எனக்குக் கவலையாக உள்ளது. புஸ்ஸி ஆனந்த் போன்றவர்கள் அவருடன் இருந்து எதுவும் சாதிக்கப் போறதில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார். விஜய் பற்றி வினோத்குமார் பதிவு செய்ததற்கு விஜய் ரசிகர்கள் பலரும் கெட்ட வார்த்தைகளால் அவரைத் திட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.