நன்றி நண்பா… விஜய்க்கு விஷால் நன்றி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் சில பல பிரச்னைகளுக்குப் பிறகு தற்போது ஆரம்பமாகி நடந்து வருகிறது. சமீபத்தில் முன்னாள் நடிகரும், தயாரிப்பாளரும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் நடிகர் சங்கத்திற்காக தலா ஒரு கோடி ரூபாயை அவர்களது சொந்த நிதியிலிருந்து வழங்கினர். அது போல நடிகர் விஜய்யும் ஒரு கோடி ரூபாயை அவரது சொந்த நிதியிலிருந்து வழங்கியுள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான விஷால், “நன்றி என்பது இரண்டு வார்த்தைகளைக் குறிக்கிறது. ஆனால், ஒரு நபர் இதயத்திலிருந்து அதைச் செய்தால் அதற்கு நிறைய அர்த்தம். எனது அபிமான நடிகர், எங்களது நடிகர் விஜய் அண்ணனைப் பற்றித்தான் பேசுகிறேன். நடிகர் சங்க கட்டடப் பணிக்காக ஒரு கோடி ரூபாயை வழங்கியதற்கு நன்றி. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

ஆம், உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்போது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டீர்கள். உங்களது ஸ்டைலில் நன்றி நண்பா,” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.