லோக்சபா தேர்தலில், தமிழர்கள் அதிகமாக உள்ள பெங்களூரு மத்திய தொகுதியில், மாநில அ.தி.மு.க., செயலர் எஸ்.டி.குமார் களமிறங்க விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு நகரின் மூன்று லோக்சபா தொகுதிகள், பெங்., ரூரல், கோலார், மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இங்கு தமிழர்கள் தான் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் வாக்காளர்களாக உள்ளனர்.
இது குறித்து, எஸ்.டி.குமார் கூறியதாவது:
பெங்., மத்திய தொகுதிக்கு உட்பட்ட காந்திநகர், சிவாஜிநகர், சாந்திநகர், ராஜாஜிநகர், சாம்ராஜ்பேட், சர்வக்ஞநகர், சி.வி.ராமன்நகர், மஹாதேவபுரா ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளிலுமே தமிழர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
இங்கு, முந்தைய காலத்தில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் இருந்துள்ளனர். எனவே வெற்றி வாய்ப்பு இருப்பதால், நான் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். தலைமை வாய்ப்பு தந்தால், களம் இறங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement