தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அரசு நிகழ்ச்சி என்பதை மறந்து தமிழக முதல்வர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது கண்டிக்கதக்கது. தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார் என்கிறார்கள். கடந்த ஆட்சி காலங்களில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணியில் இருந்த திமுக என்ன செய்ததோ அதைவிட பல மடங்கு அதிகமாக மோடி செய்து வருகின்றார்.

தென் மாவட்ட வளர்ச்சிக்காக இரட்டை ரயில்பாதை, ரயில் திட்டங்களுக்கான புதிய அறிவிப்பு, இஸ்ரோ திட்டம் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பலவற்றை செய்துள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலைகளை எழுப்பி வெற்றிபெற்று விடலாம் என தமிழக முதல்வர் நினைக்கிறார். அவரது முயற்சி நடக்காது. தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் பிரதமர் வருகையின் போது வாக்கு சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது.
போதை கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்ட ஒரு நபர் தமிழகத்தில் உள்ள முதல் குடும்பத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளார் என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் சொல்லவில்லை… அவர்களே போட்டோவை பதிவேற்றி வைத்துள்ளனர். தமிழகம் பெண்களுக்கான அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. தமிழகம் என்பது போதை கலாசாரம், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான மாநிலமாக சிறுக சிறுக மாறி வருகறது.

இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். நடிகை குஷ்பு தமிழ் மொழியை இவ்வளவு தூரம் பேசுவதே சிறப்பு. தாய் மொழி ஒன்றாகவும் கற்பித்த மொழி ஒன்றாகவும் இருப்பதால் சில நேரம் சொல்லக்கூடிய அர்த்தத்தைதான் பார்க்க வேண்டும். வார்த்தைகளை வைத்து கொண்டு குறை சொல்வது சரியல்ல. கூட்டணிகள் குறித்து பா.ஜ.க ரகசியமாக எதுவும் பேசவில்லை வெளிப்படையாகவே பேசி வருகிறோம். அனைவரும் ஒன்றினைந்து திமுக-வை வீழ்த்துவோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY