'தோனிக்கு எப்போதும் நன்றி உள்ளனவாக இருப்பேன்…' காரணத்தை கூறிய அஸ்வின்

Tamil Nadu Cricket Association, Ravichandran Ashwin: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கிய இந்த தொடர் மார்ச் மாதம் இரண்டாவம் வாரம் வரை நடைபெற்றது. இதில், பாஸ்பால் என்ற அதிரடி பாணியை கைக்கொண்ட இங்கிலாந்து அணியை, 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றியது. 

இந்த தொடரில் இந்திய அணி பல்வேறு சாதனைகள் செய்தது. அதிலும் விராட் கோலி, புஜாரா, ரஹானே போன்ற சீனியர் பேட்டர்கள் இல்லாத நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரேல் என இளம் டெஸ்ட் வீரர்கள் சிறப்பாக விளையாடி சீனியர்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்தனர். என்னதான், நடந்த முடிந்த இந்தியா – இங்கிலாந்து தொடர் இளம் வீரர்களின் தொடராக இருந்தாலும் அனுபவ வீரரான ரவிசந்திரன் அஸ்வினுக்கு நிச்சயம் மறக்கவே முடியாத தொடராக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது.

அஸ்வினின் எக்கச்சக்க சாதனைகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வின் பல சாதனைகளை படைத்தார். குறிப்பாக அவரின் 500ஆவது டெஸ்ட் விக்கெட்டை சொல்லலாம். அதேபோல், 14ஆவது இந்திய வீரராக 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் விளையாடியிருந்தார். அதிலும் தமிழக வீரர்களில் 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரரும் அஸ்வின்தான். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்ததற்காக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அஸ்வினுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கியுள்ளது#ashwin #TNCA #ZeeExclusive #ZeeTamilNews

Android Link: https://t.co/9DM6X6Ze8y
Apple Link: https://t.co/3ESH9sGYnv pic.twitter.com/nRT11GFLru

— Zee Tamil News (@ZeeTamilNews) March 16, 2024

இவை மட்டுமின்றி 100ஆவது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டை ஹாலை எடுத்ததன் மூலம், 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் அறிமுகப்போட்டியிலும், 100ஆவது போட்டியிலும் 5 விக்கெட் ஹாலை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். மேலும், இந்திய வீரர்களில் அதிக 5 விக்கெட் ஹாலை எடுத்தவர் என்ற பட்டியலிலும் தற்போது முதலிடம் பெற்றுள்ளார், சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி இரு அணிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளரும் அஸ்வின்தான். 

‘தோனிக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன்’

இப்படி எக்கச்சக்க சாதனைகளை அள்ளிக் குவித்த அஸ்வினை கொண்டாடி தீர்க்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அரங்கு ஒன்றி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 500ஆவது விக்கெட்டை வீழ்த்தியதற்கும், 100ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடியதற்கும் ரவிசந்திரன் அஸ்வினை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

. @ashwinravi99 got awarded for his 500 Test wicket achievement by TNCA, Chennai

Also he received 1 Crore rupees cheque from TNCA#Rashwin pic.twitter.com/X9HNCMmaFv

— RAJA DK (@rajaduraikannan) March 16, 2024

இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் டெஸ்டில் 500ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்ததை கௌரவிக்கும் வகையில் 1 கோடி ரூபாயை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) வழங்கியுள்ளது. மேலும், அஸ்வினை பாராட்டி பல்வேறு வீரர்கள் பேசிய வீடியோக்களும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. 

அப்போது அஸ்வின் பேசிய உரையின் ஒரு பகுதியில் அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான தோனிக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதில்,”2011ஆம் ஆண்டில் ஆர்சிபிக்கு எதிரான இறுதிப்போட்டியில், கிறிஸ் கெயிலுக்கு பந்துவீச என்னிடம் தோனி புதிய கொடுத்த சம்பவத்திற்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன்” என பேசி உள்ளார். 

I will thank #MSDhoni for the rest of my life for giving the new ball to me against Chris gayle

– #Ashwin at his 500 wickets celebration by TNCA pic.twitter.com/5mzMXy1q9s

— RAJA DK (@rajaduraikannan) March 16, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.