மக்களவை தேர்தலில் வேட்பாளர் தேர்வு திருப்திகரமாக இல்லை என்று கூறி அஜய் பிரதாப் சிங், எம்.பி. பாஜக கட்சியில் இருந்து இன்று வெளியேறினார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜய் பிரதாப் சிங். 2018ம் ஆண்டு ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவரது பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதி முடிகிறது. இந்த நிலையில் மாநிலங்களவைக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் அது மறுக்கப்பட்டதால் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. […]
