இந்த ஆண்டு தொடங்கியது முதலே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டார். அதன்படி, இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
தேர்தல் நடத்தை விதிகளும் இன்றே நடைமுறைக்கு வந்துவிட்டது. கிட்டத்தட்ட 40 நாள்களுக்கும் மேலாக நடக்கும் இந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 96.8 கோடி பேர் வாக்களிக்கவிருக்கின்றனர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்துவது நல்லதல்ல என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, “7 கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதால் கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தப்படக்கூடும்.

கிட்டத்தட்ட 70 முதல் 80 நாள்களுக்கு வளர்ச்சிப் பணிகளை நிறுத்தினால் நாடு எப்படி இயங்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். ஏனெனில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, மக்கள் நகர முடியாது, பொருள்கள் விநியோகம் செய்ய முடியாது, பட்ஜெட் செலவழிக்கப்படாது. எனவே, என்னைப் பொறுத்தவரை இது நல்லதல்ல. மூன்று அல்லது நான்கு கட்டங்களில் தேர்தலை நடத்தி முடித்திருக்கலாம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY