கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் பிரதமர் மோடி, இன்று மாலை மாலை 4.35 மணிக்கு கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையம் வருகை தரவுள்ளார். அங்கிருந்து கார் மூலம் ரோடு ஷோ நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, மாலை 6.45 மணிக்கு அதனை நிறைவு செய்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவை நகரில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 11 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி இல்லை. மேலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY