
'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா?
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இரண்டு தெலுங்குப் படங்கள் உள்ளன. ஒன்று பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 எடி', மற்றொன்று அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2'.
தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர சட்டசபைத் தேர்தலும் அதே நாளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 9ம் தேதி 'கல்கி 2898 எடி' படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அந்தப் படம் தள்ளிப் போனால் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், 'புஷ்பா 2' படக்குழு தரப்பில் வேறு எந்தத் தேதியிலும் படத்தை தள்ளி வைக்க வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி ஏற்கெனவே அறிவித்த தேதியில் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்களாம்.