கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான ஷோபா இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்கள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பொறுப்பற்றது என்று விமர்சித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரிவினைவாத அரசியலை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், இதுபோன்று பேசுவதற்கு ஒன்று தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் அல்லது குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற பேச்சுக்களை தமிழர்களும், […]
