
'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா?
மலையாள நடிகைகள் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு இனம் புரியாத ஒரு அபிமானம் உண்டு. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தமிழில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து ராணியாகத் திகழ்ந்த பல நடிகைகள் உண்டு. அவர்களது வரிசையில் இடம் பிடிப்பாரா 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
மலையாளத்தில் வெளியாகி 100 கோடி வசூலைக் கடந்து தமிழிலும் டப்பிங் ஆகி கடந்த வாரம் வெளியான படம் 'பிரேமலு'. அப்படத்தின் கதாநாயகி மமிதா பைஜு, இந்த வாரம் வெளியாகும் 'ரெபல்' படம் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார்.
முன்னதாக சில மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் 'பிரேமலு' படம் இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்த ஒரு நடிகையாக மாறிவிட்டார். 'ரெபல்' படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால், இங்கும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கலாம்.