4 Tamilnadu passengers killed as van overturns in Kerala | கேரளாவில் வேன் கவிழ்ந்து தமிழக பயணியர் 4 பேர் பலி

கேரளாவின் மூணாறு அருகே ஆனக்குளம் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து தந்தை, அவரது ஒரு வயது மகன் உட்பட தமிழக சுற்றுலா பயணியர் 4 பேர் பலியாயினர்.

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் பிரஷர் குக்கர் தயாரிக்கும் கம்பெனி ஊழியர்கள், டீலர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்தது.

அவர்கள் வேன், கார் மூலம் இரண்டு நாட்களுக்கு முன் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். மூணாறு அருகே லட்சுமி எஸ்டேட் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். அருகே மாங்குளம் ஊராட்சியில் முக்கிய சுற்றுலா பகுதியான ஆனக்குளத்திற்கு சென்றனர்.

அப்பகுதியை ரசித்து விட்டு விடுதியை நோக்கி திரும்புகையில் பேய்மரம் பகுதி வளைவில் திரும்பியபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் குழந்தைகள் உட்பட 14 பேர் இருந்தனர்.

விபத்து நடந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வேறு வாகனத்தில் வந்த பயணியர் உள்ளூர் மக்கள் உதவியுடன் வேனில் சிக்கியவர்களை மீட்டு, அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதில் தேனியை சேர்ந்த குணசேகரன், 70, அபிநாஸ்மூர்த்தி, 30, அவரது 1 வயது மகன் தன்விக், ஈரோட்டைச் சேர்ந்த பாத்திர கடை உரிமையாளர் சேது, 34, ஆகியோர் வழியிலேயே இறந்தனர்.

தேனியைச் சேர்ந்த வேன் டிரைவர் உட்பட பலர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அடிமாலி, தொடுபுழா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

– நமது நிருபர் —

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.