சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவரான ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “பாஜகவுக்கு. தேசிய மலரான தாமரையைக் கட்சியின் சின்னமாக ஒதுக்கியது அநீதி ஆகும். நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது போல இது உள்ளதால், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று செப்டம்பர் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினோம். […]
