சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் மிட்-ரேஞ்ஜ்டு செக்மென்ட் போனாக வெளியாகி உள்ளது.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் T3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சந்தையில் விவோ நிறுவனம் ‘T’ வரிசையில் போன்களை வெளியிட்டுள்ளது. அதில் விவோ டி1 புரோ, டி2 மற்றும் டி2 புரோ போன்கள் இருந்துள்ளன. இந்த சூழலில் தற்போது டி3 மாடலை சந்தையில் களம் இறக்கியுள்ளது விவோ. iQOO Z9 மற்றும் Narzo 70 புரோ மாடல் போன்களுக்கு விற்பனையில் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7200 5ஜி ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி/256ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேரமா
- 5,000mAh பேட்டரி
- 44 வாட்ஸ் ஃபிளேஷ்சார்ஜ் அம்சம்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போன் வரும் 27-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது
- இதன் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது
Lights, camera, Gen-Turbo! Join Rohit, Vedang, and Mihir on a journey through the world of Gen-Turbo with the all-new vivo T3 5G. With its lightning-fast MediaTek Dimensity 7200 processor and many more stunning features, the vivo T3 5G is here to change the game!
Know More-… pic.twitter.com/YMYbXQHEwh
— vivo India (@Vivo_India) March 21, 2024