அதானியின் காற்றாலை மின் திட்டத்துக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு

ராமேசுவரம்: அதானியின் கிரீன் எனர்ஜி லிமிடெட் கடந்த ஆண்டு 442 மில்லியன் டாலர் மதிப்பில் மன்னார் மற்றும் பூநகரி கடற்பகுதியில் 483 மெகாவாட் அளவிலான 2 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இலங்கை அரசிடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த திட்டத்தால் மன்னார் பல்லுயிர் சுற்றுச்சூழலுக்கும், காற்றாடி இறக்கைகள் ஏற்படுத்தும்ஒலி மாசினால் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். கடல் நீருக்கடியில் பொருத்தப்படும் பிரம்மாண்ட மின் கேபிள்களால் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படும் எனக் கூறி, இலங்கையின் சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மன்னார் மற்றும் பூநகரிகடற்பகுதியை சேர்ந்த மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர், பறவைகள் சரணாலயமாக விளங்கும் மன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்படும் புதிய காற்றாலை மின் நிலையம் மூலம் சுற்றுச்சூழலுக்கு பேரழிவு ஏற்படும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கைக்கு வலசை வரும்பறவைகளின் பயணப் பாதையில்மன்னார் கடற்பகுதி முக்கிய இடமாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்கள் மட்டுமின்றி இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை குறித்தும் பல சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்த ஒப்பந்தம் வழங்குவதற்கு முறையான டெண்டர் முறையும் பின்பற்றப்படவில்லை.

இலங்கையில் இத்திட்டத்துக்கு பொருத்தமான பல இடங்கள் உள்ளன. அதனால் இத்திட்டத்துக்கு மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.