டில்லி ஒரு காலத்தில் மதுவை எதிர்த்து தற்போது மது தயாரிப்பை கெஜ்ரிவால் ஆதரிப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். நேற்று இரவு டில்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் கெஜ்ரிவால் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம், “ஒரு காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் என்னுடன் பணியாற்றி மதுவுக்கு எதிராகக் குரல் […]
