காட்டிலாகா அதிகாரியாக நடிக்கும் சுனைனா

நிலா நிலா ஓடிவா, சாதரங்கம், பிங்கர் பிரிண்ட்ஸ், மீட் கியூட் உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ள சுனைனா தற்போது நடித்துள்ள தொடர் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'. இதில் அவர் காட்டிலாகா அதிகாரி 'காத்தி' என்ற கேரக்டரில் நடிக்கிறார். கதையின் நாயகனாக அதாவது இன்ஸ்பெக்டர் ரிஷியாக நவீன் சந்திரா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 10 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் வருகிற 29ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

காட்டுக்குள் திடீர் திடீரென மர்ம சாவுகள் நடக்கிறது. இறந்து போனவர்களை சுற்றி பூச்சிகள் கூடுகட்டுகிறது. எதனால் இப்படி நடக்கிறது என்பதை போலீஸ் அதிகாரி நவீன் சந்திராவும், காட்டிலாகா அதிகாரி சுனைனாவும் இணைந்து கண்டுபிடிப்பதுதான் கதை. திகில், மர்மங்கள் நிறைந்த பேண்டசி தொடராக உருவாகி உள்ளது.

இதில் நடித்திருப்பது பற்றி சுனைனா கூறும்போது “இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் வன அதிகாரி காத்தியின் பாத்திரத்தில் நடித்தற்காக மகிழ்ச்சியடைகிறேன். கதாசிரியர்கள் எனது கதாபாத்திரத்தை மிக நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார்கள், மேலும் காத்தியின் குணாதிசயங்கள் என்னுடன் ஆழமாக எதிரொலித்தன. செட்டில் இருந்த ஆதரவான சூழல், திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து, காத்தியின் மென்மையான மற்றும் கடுமையான ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்த அனுமதித்தது. இயற்கை, அமைதி மற்றும் மர்மம் நிறைந்த ஒரு உலகத்திற்கு பார்வையாளர்களை வெற்றிகரமாக இட்டுச் செல்வோம் என்று நான் நம்புகிறேன்”என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.