
ஹோலி பண்டிகை கொண்டாடிய ரம்யா பாண்டியன்
ஜோக்கர், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார். சினிமாவில் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் அவ்வப்போது தனக்கு பிடித்த படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம், சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கிளாமர் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது மஞ்சள் நிற உடை அணிந்து வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டு ஹோலிப் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள்.