10 நிமிட சந்திப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் : கட்டணம் விபரம் வெளியிட்ட அனுராக் காஷ்யப்

முன்னணி பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தார். லியோ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தார். ஆனால் பாலிவுட்டில் வெப் தொடர்களிலும், படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பதோடு தனது மனதில் தோன்றியதை சமூக வலைத்தள பதிவில் தைரியமாக வெளியிடுகிறவர். சமீபத்தில் தென்னிந்திய படங்களிடமிருந்து பாலிவுட் படங்கள் பாடம் கற்க வேண்டும் என்று கூறினார். சமீபத்தில் வெளியான 'மஞ்சுமோல் பாய்ஸ்' படத்தையும் பாராட்டி தள்ளினார்.

தன்னை தேடி வருகிறவர்களை சந்திப்பதன் மூலம் தனது நேரம் வீணாவதாக கருதும் அனுராக் காஷ்யப் அதை கட்டுப்படுத்துவதற்காக தன்னை சந்திப்பதற்கு நிமிட கணக்கில் கட்டணம் நிர்ணயம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: சினிமா சம்பந்தப்பட்ட சில விஷயங்களைப் பேச, தினமும் என்னை நேரில் சந்திக்க பலர் வருகின்றனர். புதுமுகங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், சுமாரான சில படைப்புகளை நான் ஊக்குவித்து விட்டேன். எனவே, தங்களை மிகப்பெரிய 'கிரியேட்டிவ் ஜீனியஸ்' என்று நினைத்துக் கொண்டு வருபவர்களிடம், இனிமேல் எனது நேரத்தை நான் செலவிட விரும்பவில்லை.

எனவே, இனிமேல் என்னை நேரில் சந்தித்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை என்னுடன் பேச வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாயும், அரை மணி நேரம் பேச வேண்டும் என்றால் 2 லட்ச ரூபாயும், அதுவே ஒரு மணி நேரம் என்றால் 5 லட்ச ரூபாயும் பணம் கொடுத்தால்தான் பேச முடியும். உங்களால் அப்பணத்தை அட்வான்சாக கொடுக்க முடியும் என்றால் என்னை அழையுங்கள். இல்லை என்றால் விலகி இருங்கள்.

இதுபோன்ற பல சந்திப்புகளால் எனது பொன்னான நேரத்தை வீணடித்து விட்டேன். இனிமேல் நான் கேட்கும் பணத்தை உங்களால் தர முடியும் என்றால் மட்டுமே என்னை அழையுங்கள். என்று எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.