சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்குள் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்குக் கெடு விதித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரித் தேர்தல் ஆணையத்திடம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் […]
