வீடியோ.. 42 வயதிலும் வேற லெவல் தோனி.. என்னவொரு கேட்ச் "மனிதர் உணர்ந்து கொள்ள…இது மனித காதல் அல்ல"

CSK v GT IPL 2024: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் சீசனின் ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் எதிர்க் கொண்டனர். இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி டைவ் அடித்து பாய்ந்து பிடித்த கேட்ச் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இந்த வயதிலும் எம்.எஸ்.தோனியின் சிறந்த உடற்தகுதி இளம் வீரர்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளது. 42 வயதிலும் அவரின் கீப்பிங் ஸ்டைலில் எந்தவித தொய்வும் இல்லை. “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல” என்பதைப் போல ஒரு சிறந்த கேட்சை பிடித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிடி (GT) அணியின் கேப்டன் ஷுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தலா 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். அதனைத்தொடர்ந்து ஷிவம் துபே 23 பந்துகளில் 51 ரன்களும், டேரில் மிட்செல் 24* ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தீபக் சாஹர் அதிர்ச்சி அளித்தார். சிஎஸ்கேக்கு சிறந்த தொடக்கத்தை அளித்த சென்னை அணியின் பந்து வீச்சாளர் தீபக் சாஹர், ஷுப்மான் கில்லை 8 ரன்களில் வெளியேற்றினார். பின்னர் விருத்திமான் சாஹா 21 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். 34 ரன்களுக்கு இரண்டு முக்கிய விக்கெட்டை குஜராத் அணி இழந்தது. இந்த இரண்டு சிறந்த விக்கெட்டையும் தீபக் சாஹர் கைப்பற்றினார்.

Still got it #ThalaThalaDhaan

pic.twitter.com/U1QZs6DmW1

— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2024

மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விஜய் சங்கர், 12 ரன்கள் எடுத்திருந்த போது, மிட்செல் வீசிய 8வது ஓவரின் 3வது ஃபுல்-லெங்த் பந்தை, விஜய் ஷங்கர் டிரைவ் செய்ய முயன்றார். அந்த பந்தை 42 வயதான தோனி, சுறுசுறுப்பாக, அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.