செயற்றிட்டங்களின் வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பயனாளிகளும் அக்கறை செலுத்த வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் ஒவ்வொன்றினம் முழுமையான வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் அதிக கரிசனையும் அக்கறையும் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்படும் போதுதான் வழங்கப்படும் திட்டங்கள் அல்லது அபிவிருத்திகள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்கும் முழுமையான இலக்கை அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27-03-2024) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல்வேறுபட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன.

நீண்டகாலமாக இராணுவத்தினரது தேவைக்காக பயன்படுத்தப்பட்டுவந்த குறித்த காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் அக்காணிகளை உரியவர்கள் இன்னமும் முழுமையாக பொறுப்பெடுக்காத நிலை காணப்படுகின்றது.

காணிகளை வரையறை செய்து எல்லையிட்டு பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கால அவகாசம் தேவையாக உள்ளது.

இதனால் குறித்த காணிகளை உரித்தாளர்கள் இன்னமும் பொறுப்பெடுக்காத நிலை காணப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.

இதனால் குறித்த காணிகள் மோசடிகளுக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.

எனவே அக்காணிகளின் உரித்தாளர்கள் தமது காணிகளை உரியவகையில் எல்லையிட்டு பொறுப்பெடுக்ககும்வரை அக்காணிகளின் பாதுகாபை பொலிசாரும் படையினரும் பாதுகாத்துக்கொடுப்பது அவசியமானது

அதுமட்டுமல்லாது அக்காலப்பகுதிவரை காணிகளின் பாதுகாப்பை உறுத்திப்படுத்திக் கொடுப்படு பாதுகாப்பு படையினருக்கும் பொலிசாருக்கும் உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது  மேலும் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.