பெங்களூரு கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்பமொய்லி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிடக் காங்கிரசில் டிக்கெட் கேட்டார். அவருக்குக் காங்கிரஸ் மேலிடம் டிக்கெட் தரவில்லை. காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி ரக்ஷா ராமையாவுக்கு அவருக்கு பதிலாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிருப்தியில் இருந்து வந்த அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். […]
