சிதம்பரம்: தமிழ்நாட்டுக்கு தனி கொடி அனுமதிக்கப்பட வேண்டும்; ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி-க்கு தனி வங்கி உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டபட்டினத்தில் வெளியிட்டார்.
Source Link
