
புதிய சாதனை படைத்த 'புஷ்பா 2' டீசர்
தெலுங்குத் திரையுலகம் கடந்த சில வருடங்களில் பான் இந்தியா படங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. பிரபாஸ், ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகர்களாக மாறியுள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் 'புஷ்பா 2' படத்தின் டீசர் நேற்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. டீசர் வெளியான 12 மணி நேரங்களிலேயே 51 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் தெலுங்கில் 24 மணிநேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற புதிய சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது. இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் 42 மில்லியன் சாதனைகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் 'ராதேஷ்யாம்' சாதனையை 'புஷ்பா 2' டீசர் முறியடித்துள்ளது. மேலும், இந்த டீசருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன.
இந்த வருட தெலுங்கு வெளியீடுகளில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக 'புஷ்பா 2' அமையலாம் என்ற எதிர்பார்ப்பு டீசர் வெளியீட்டிற்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.