ஜம்மு இமயமலைப் பகுதியில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத் தரிசன யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாகச் சென்று வருகின்றனர். நடப்பாண்டுக்கான யாத்திரை ஜூன் 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது. எனவே 2024-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் […]
