ஊட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் முக்கிய தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கட்டங்களாகப் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று அவர் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் கோத்தகிரி வழியாகச் சாலை மார்க்கமாக நேற்று ஊட்டிக்கு […]
