சென்னை: நடிகர் விக்ரமின் திரைப்பயணம் நீண்ட நெடியது. கடினமானதும்கூட. இந்தப்பயணத்தில் அவர் சந்தித்த வெற்றிகளை பெறுவதற்காக அவர் அனுபவித்த வேதனைகளை பட்டியலிட முயன்றால் அது கண்டிப்பாக நடக்காத விஷயம்தான். பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில்தான் முதல்முறையாக இத்தகைய சோதனைகளை சாதனைகளாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் விக்ரம். முன்னதாக சாக்லேட் பாய் கேரக்டர்களில் மட்டுமே அவர் நடித்திருந்தார்.
