அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதில் சுயேட்சையாக களமிறங்கிய ஜிதேந்திர சவுகான் என்பவர் அமித் ஷா-வின் ஆட்கள் தன்னை கடத்தி மிரட்டியதை அடுத்து தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுள்ளதாக ‘ஸ்க்ரோல்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். ஜிதேந்திர சவுகான் உட்பட 3 வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ‘ஸ்க்ரோல்’ இதழ் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் இதுவரை 16 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகவும் அதில் சுயேட்ச்சைகள் தவிர […]
