நாட்டில் குறைந்த வருமானம் பெறும்  3.4 மில்லியன் குடும்பங்களுக்கு 26.6 பில்லியன் ரூபா அரிசி விநியோகம் …

ஜனாதிபதியின் கொள்கைக்கு இணங்க நாடு பூராகவும் உள்ள இருபத்தைந்து மாவட்டங்களின் குறைந்த வருமானம் பெறும்

குடும்பங்களுக்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10 கிலோ அரிசி வீதம் வழங்கும் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

  நாடு முழுவதும் உள்ள குறைந்த வருமானம் பெறும் 3.4 மில்லியன் குடும்பங்கள்  தகுதி பெற்றுள்ளதுடன் இதற்காக 26.6 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கே ஜி விஜேஸ்ரீ தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அரிசி விநியோகிக்கும் திட்டம் தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவின் ஏற்பாட்டில் இன்று (03) இடம்பெற்ற ஊடகக்  கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கொழும்பு மாவட்ட செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இக்குறைந்த வருமானம் வரும் குடும்பங்களுக்காக அரிசி விநியோகிக்கும் வேலைத் திட்டம் இக்குடும்பங்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் தெரிவித்த கொழுப்பு மாவட்ட செயலாளர், இத்திட்டத்திற்காக கொழும்பு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 421 (183,421) குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்களுக்காக 700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மாவட்டத்திற்காக அவசியமான அரிசி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவசியமான நிதி ஒதுக்கீடு தேவைக்கேற்ப சுமுகமாக திறைசேரியிலிருந்து கிடைக்கப்பட்டுள்ளதாகவும் கே. ஜி விஜேஸ்ரீ தெரிவித்தார்.    

நேற்று மே மாதம் இரண்டாம் திகதி வரை கொழும்பு மாவட்டத்தில் 183,421 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதுடன் அதில்  150,000 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ வீதம் அரிசி விநியோகம் நிறைவு பெற்றுள்ளதாகவும் மீதமானவர்களுக்கு இன்னும் சில நாட்களுக்குள் அரிசியை வழங்கி முதற்கட்ட அரிசி விநியோகத்தை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் சில நாட்களில் இரண்டாம் கட்ட அரிசி விநியோகத்தை ஆரம்பிக்கவிருப்பதாகவும்  இம்மாதம் நிறைவு பெறுவதற்கு முன்னர் சகல அரிசி விநியோகத்தையும் பூர்த்தி செய்ய உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இவ் ஊடகக் கலந்துரையாடலில் கொழும்பு மாவட்டத்தின்  கே. ஜி. விஜேசிறி, களுத்துறை மாவட்டத்தின் கினிகே பிரசன்ன ஜனக குமார மற்றும் கம்பஹா மாவட்டடத்தின் லலிந்த கமகே ஆகிய  மாவட்ட செயலாளர்கள், நேரடியாக கலந்து கொண்டதுடன் ஏனைய 22 மாவட்டங்களின் செயலாளர்களும் ஸூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நிகழ்நிலையில் பங்கேற்றுத் தமது மாவட்டங்களின் குறைந்த வருமானம் வரும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகிக்கும் வேலை திட்டத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவு படுத்தினார்கள்.

அரிசி உற்பத்தி இடம்பெறாத மற்றும் போதிய உற்பத்தி காணப்படாத  நுவரேலியா, பதுளை,  இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், மாத்தளை போன்ற மாவட்டங்களில் இருந்து இவ் அரிசி விநியோகத்திற்காக அம்பாறை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அனுராதபுர ஆகிய மாவட்டங்களில் இருந்து அரிசி பெறப்பட்டதாகவும் இங்கு மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அத்துடன் அதிக விளைச்சளைப் பெற்ற மாவட்ட நெல் விற்பனை மற்றும் அரிசி உற்பத்தியாளர்களுக்கு தமது விநியோகத்தில் அதிகரிப்பு ஏற்பட்டதாவும், விநியோகத்திற்காகப பெ றப்பட்ட அரிசி நன்கு பரிசோதனை செய்யப்பட்டு, தரம் உத்தரவாதப் படுத்தப்பட்டதன் பின்னரே விநியோகிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 123,500 மூடை அரிசியில் ஹாலி எலயில் 7 மற்றும் ஹபுத்தளையில் 4 மூடைகளில் மாத்திரம் தவறு ஏற்பட்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் விபரித்தார். ஏனைய மாவட்டங்களில் 80% தொடக்கம் 90% வீதமான விநியோகம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

அரிசி உற்பத்தி இடம்பெறாத மற்றும் போதிய உற்பத்தி காணப்படாத  நுவரேலியா, பதுளை,  இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், மாத்தளை போன்ற மாவட்டங்களின் அரிசி விநியோகத்திற்காக அம்பாறை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அனுராதபுர ஆகிய மாவட்டங்களில் இருந்து அரிசி பெறப்பட்டதாகவும் இங்கு உரையாற்றிய மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.