சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய நிலையில், அதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் அவைக்காவலர்கள் மற்றும் காவல்துறையினரை கொண்டு குண்டுகட்டாக தூக்கி வெளியேற்ற்றினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 50ஆக உயர்ந்துள்ளது. இந்த சாராயத்தை விற்பனை செய்தது திமுகவினர் என்பதால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் […]